டிரம்பின் ஆலோசகரை பரப்புரையாளராக தேர்ந்தெடுத்த இந்தியா: யார் இந்த ஜேசன் மில்லர்?

டிரம்ப் குறித்து முழுமையாக அறிந்திருப்பவர் என்ற அடிப்படையில், இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைக்கு ஜேசன் பெருமளவில் உதவுவார் என்று கூறப்படுகிறது.
ஜேசன் மில்லர்
ஜேசன் மில்லர்
1 min read

அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த ஆலோசகரான ஜேசன் மில்லரை, அதிகாரபூர்வ பரப்புரையாளராக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் நியமித்துள்ளது.

தேவைப்படும் நேரங்களில், அமெரிக்காவில் இந்திய அரசுக்கான `ஆலோசனை, ராஜதந்திர திட்டமிடல், பரப்புரை, மக்கள் தொடர்பு சேவை’ போன்றவற்றை அவர் வழங்குவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளிக்க அனைத்துக் கட்சி குழுவினர் வெளிநாட்டுப் பயணங்களைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.

மே 21 அன்று ஓராண்டுக்கான ஒப்பந்தம் மில்லருடன் கையெழுத்திடப்பட்டதாகவும், இதில் மாதந்தோறும் அவருக்கான 1.5 லட்சம் அமெரிக்க டாலர் தொகையும் அடங்கும் என்று பொலிட்டிகோ வெளியிட்ட செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் அரசியல் ஆலோசனை நிறுவனமான ஜேம்ஸ்டவுண் அலோசியேட்ஸின் துணைத் தலைவராக மில்லார் செயல்பட்டார். இதைத் தொடர்ந்து, 2016 அதிபர் தேர்தல் பரப்புரையின்போது டொனால்ட் டிரம்பின் தலைமை செய்தித் தொடர்பாளராகவும், 2020, 2024 தேர்தல் பரப்புரைகளின்போது, டிரம்பின் தலைமை ஆலோசகராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அமெரிக்க அரசிடம் விளக்கமளிக்கும் பணியை, சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. இருப்பினும், டிரம்ப் குறித்து முழுமையாக அறிந்திருப்பவர் என்ற அடிப்படையில், இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைக்கு ஜேசன் பெருமளவில் உதவுவார் என்று கூறப்படுகிறது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில், பாதிப்படைந்த நாடாக அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தன்னை அடையாளப்படுத்துவதை எதிர்ப்பதற்கு மில்லரின் உதவி மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in