அய்யா: சேரன் இயக்கத்தில் உருவாகும் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு! | Ayya | Ramadoss

இட ஒதுக்கீடு கோரி வன்னியர் சமூகம் மேற்கொண்ட போராட்டத்தை அடிப்படையாக வைத்து ராமதாஸின் வாழ்க்கை வரலாறு உருவாகி வருகிறது.
அய்யா: சேரன் இயக்கத்தில் உருவாகும் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு! | Ayya | Ramadoss
1 min read

சேரன் இயக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. `அய்யா’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர்களை ராமதாஸ் வெளியிட்டார். 86 வயதான ராமதாஸின் பிறந்தநாளை இன்று (ஜூலை 25) கொண்டாடப்படுவதை ஒட்டி, படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

`1987 இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு’ என்று அந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இட ஒதுக்கீடு கோரி வன்னியர் சமூகம் மேற்கொண்ட போராட்டத்தை அடிப்படையாக வைத்து ராமதாஸின் வாழ்க்கை வரலாறு உருவாகி வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சேரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஜி.கே.எம். தமிழ்குமரன் தயாரிக்கிறார். பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியின் மகனாவார் தமிழ்குமரன். மேலும், இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரமும், இசையமைப்பாளராக கே.எஸ். சுந்தரமூர்த்தியும் பணியாற்றுகின்றனர்.

குறிப்பாக, ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நடித்து வருகிறார். அவரை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்தே போஸ்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேநேரம் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in