இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் ஜெகதீசன்: தகவல் | N Jagadeesan

இஷான் கிஷனும் காயம் காரணமாக ஓய்வில் உள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் ஜெகதீசன்: தகவல் | N Jagadeesan
ANI
1 min read

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயமடைந்துள்ள ரிஷப் பந்துக்குப் பதிலாகத் தமிழ்நாட்டு வீரர் என். ஜெகதீசன் தேர்வாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மான்செஸ்டரில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் பேட்டிங் செய்தபோது ரிஷப் பந்துக்குக் காயம் ஏற்பட்டது. அவருடைய வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து, இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகுகிறார். எனினும், பிசிசிஐ இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

பிசிசிஐ-யின் சமீபத்திய அறிவிப்பின்படி, காயமடைந்துள்ள ரிஷப் பந்த் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அணியின் தேவைக்கேற்ப அவர் பேட்டிங் செய்வார் என்றும் இந்த டெஸ்டில் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார் என்றும் அறிவித்துள்ளது. துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்கிறார். அறிவிப்புக்கேற்ப, 6-வது விக்கெட் விழுந்தவுடன் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த் களமிறங்கினார்.

இந்நிலையில் கடைசி டெஸ்டுக்கு ரிஷப் பந்துக்குப் பதிலாக இஷான் கிஷன் தேர்வாவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் என். ஜெகதீசன், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குத் தேர்வாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசா ஏற்பாடுகள் முடிவடைந்த பிறகு உடனடியாக இங்கிலாந்து செல்லவுள்ளார் ஜெகதீசன்.

29 வயது ஜெகதீசன், 52 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 47.50 ரன்கள் சராசரியில், 10 சதங்களுடன் 3,373 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ரஞ்சி கோப்பையில் 8 ஆட்டங்களில் 2 சதங்கள், 56.16 சராசரியுடன் 674 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் என இரு தமிழ்நாட்டு வீரர்கள் ஏற்கெனவே உள்ளார்கள்.

Ind v Eng | India v England | Ind vs Eng | India vs England | Yashasvi Jaiswal | Sai Sudharsan | KL Rahul | Rishabh Pant | Ben Stokes | Anshul Kamboj | Liam Dawson | Old Trafford | Old Trafford Test | Manchester | Manchester Test | Pant Injury | India Tour of England | India England Series | Pant Fracture | Rishabh Pant Injury | Rishabh Pant ruled out | Ishan Kishan

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in