ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் மறுப்பு

முன்னதாக, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளுக்கு செபி தலைவர் மாதபி புச் மறுப்பு தெரிவித்தார்.
ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் மறுப்பு
1 min read

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரிப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புச் மற்றும் இவருடையக் கணவர் பங்குகளை வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டி ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு செபி தலைவர் மாதபி புச் மறுப்பு தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து, அதானி குழுமமும் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

"ஹிண்டன்பர்கின் சமீபத்திய குற்றச்சாட்டுகள் தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்ட சூழ்ச்சியானவை. சுயலாபத்துக்காக முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒரு முடிவை அடைவதற்காக பொதுத் தளங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முழுமையாக விசாரிக்கப்பட்டு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், உச்ச நீதிமன்றத்தால் கடந்த ஜனவரியில் நிராகரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுசுழற்சி செய்து வெளியிட்டுள்ளார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் நிராகரிக்கிறது" என்று அதானி குழுமம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in