ஜாஃபர் சாதிக் பணத்தை வெள்ளையாக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் உதவி: அண்ணாமலை குற்றச்சாட்டு

ஜாஃபர் சாதிக்கின் நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததார நிறுவனமான Sri Appu Direct நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு பொருள்களை வழங்கியுள்ளது.
ஜாஃபர் சாதிக் பணத்தை வெள்ளையாக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் உதவி: அண்ணாமலை குற்றச்சாட்டு
1 min read

போதைப் பொருள் விற்பனை மூலம் ஜாஃபர் சாதிக்கிற்குக் கிடைத்த பணத்தை வெள்ளையாக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் மறைமுகமாக உதவியதாக குற்றம்சாட்டியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

இந்த விவகாரம் தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இன்று (டிச.16) அண்ணாமலை பதிவிட்டவை பின்வருமாறு,

`சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக்கின் Coalescence Ventures என்ற நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததார நிறுவனமான Sri Appu Direct என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொருள்களை வழங்கியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, 2022–2023 காலகட்டத்தில், தனது Coalescence Ventures நிறுவனத்தில் ஜாஃபர் சாதிக் முதலீடு செய்திருப்பது விசாரணையில் வெளிவந்துள்ளது. இதே காலகட்டத்தில் Sri Appu Direct நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்த ஒப்பந்தத்துக்கான பொருள்களை Sri Appu Direct நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது ஜாஃபர் சாதிக்கின் Coalescence Ventures நிறுவனம். இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில், திமுக நிர்வாகியாக இருந்த ஜாஃபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளது இதன் மூலம் தெரிய வருகிறது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in