சிறந்த நூல்களுக்கான பரிசு: விண்ணப்பிக்கத் தமிழ் வளர்ச்சித்துறை அழைப்பு
சிறந்த நூல்களுக்கான பரிசு: விண்ணப்பிக்கத் தமிழ் வளர்ச்சித்துறை அழைப்பு

சிறந்த நூல்களுக்கான பரிசு: விண்ணப்பிக்க தமிழ் வளர்ச்சித்துறை அழைப்பு

1.1.2023 முதல் 31.12.2023 வரை தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் பரிசுப் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.
Published on

தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல்களுக்கான பரிசைப் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழுக்குத் தகுந்த நூல்களைப் படைத்து பெருமை சேர்க்கும் நூலாசிரியர்களுக்கும், அந்த நூல்களை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பரிசும், பாரட்டுச் சான்றிதாலும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் 2023-ல் தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள், மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், புதினம், திறனாய்வு, நாடகம், உட்பட 33 வகைப்பாடுகளின் கீழ், பரிசுப் போட்டிக்கு வரவேற்கப்படுவதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

1.1.2023 முதல் 31.12.2023 வரை தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் உட்பட 33 வகைப்பாடுகளின் கீழ், பரிசுப் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.

போட்டிக்கான விண்ணப்பம் மற்றும் இதர விதிமுறைகள் அடங்கிய விவரங்களை www.tamilvalarchithurai.org / siranthanool என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

போட்டிக்கான விண்ணப்பத்துடன் 5 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100-யும் “தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை” என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலை (Demand draft)இணைத்து ஆகஸ்ட் 30-க்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

தமிழ் வளர்ச்சி இயக்குநர்

தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம்

தமிழ்ச்சாலை, எழும்பூர்,

சென்னை 600 008

தொலைபேசி எண்கள்: 044 - 28190412, 28190413

logo
Kizhakku News
kizhakkunews.in