

விஜயை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது பற்றி எதுவும் தெரியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜயை, காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளரும் ராகுல் காந்தியுடன் நெருக்கம் காட்டி வருபவருமான பிரவீன் காந்தி நேற்று (டிச. 5) சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதுகுறித்த செய்திகள் வெளியாகி, தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க திட்டம் தீட்டுகிறதா என்ற கேள்வியை எழுப்பியது. இதற்கிடையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, விஜயைப் பிரவீன் காந்தி சந்தித்தது குறித்து எதுவும் தெரியாது என்று கூறினார். அவர் பேசியதாவது:-
“திமுகவிலும் கூட்டணி பற்றி ஆலோசிக்க குழு அமைக்கப்பட உள்ளது. நாங்கள் பேசுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் முன்னரே சொன்னதுபோல் கிழக்கே, மேற்கே, வடக்கே, தெற்கே என்று எந்தத் திசையிலும் சந்தேகப்படாதீர்கள். இண்டியா கூட்டணி வலிமையாக உள்ளது. காங்கிரஸ் கட்சி எல்லாக் கட்சிகளுடனும் கூட்டணிக்குப் பேசுகிறார்கள் என்றும் சொன்னார்கள். நாங்கள் திமுகவுடன் மட்டும்தான் கூட்டணிக்குப் பேசி வருகிறோம். தவெக தலைவர் விஜயுடன் காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீண் சக்கரவர்த்தி பேசினார் என்பதற்கு படமோ, காணோளியோ வெளியானதா? அவர் பேசினாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் திமுகவுடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினோம். முதலமைச்சருடன் பேசிய படங்கள் வெளியே வந்தன. செய்தியாளர்களைச் சந்தித்தோம். இதுபோல் ஏதும் நடந்தா? ஒருவேளை அவர் சென்று பேசியிருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்” என்றார்.
Tamil Nadu Congress Committee President Selvapperundhagai has said that he does not know anything about Praveen Chakravarthy meeting Vijay.