
ஹிந்தி தேசிய மொழி அல்ல என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அஸ்வின், அண்மையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது, ஹிந்தி தேசிய மொழி அல்ல, அது அலுவல் மொழி என்று பேசினார். தமிழ்நாட்டிலிருந்து சென்று இந்திய அணிக்காக விளையாடியவர் என்ற அடிப்படையில் அஸ்வினின் கருத்து முக்கியத்துவம் பெற்றது.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் மதுரையில் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
"சரி தான், ஹிந்தி நம் தேசிய மொழி அல்ல. அண்ணாமலையும் அதை தான் சொல்கிறார். இனிய நண்பர் அஸ்வின் மட்டும் அதைச் சொல்லவில்லை. ஹிந்தி தேசிய மொழி அல்ல. அது இணைப்பு மொழி. நம் வசதிக்காகப் பயன்படுத்தப்படும் மொழி" என்றார் அண்ணாமலை.