கோவையில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

ஆவாரம்பாளையம் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பிரசாரம் எனப் புகார்.
கோவையில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
படம்: https://twitter.com/annamalai_k
1 min read

கோவையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரசாரம் மேற்கொண்டதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவரும், கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை நேற்றிரவு கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பிரசாரம் மேற்கொண்டதாக அவர் மீது புகார் எழுந்தது.

தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரத்தை ஈடுபட்டதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in