கோவையில் 500 நாட்களில், 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை

250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும்.
அண்ணாமலை
அண்ணாமலை @annamalai.k

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் 500 நாட்களில், 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ளது. கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் கோவையில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அண்ணாமலை, தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.

அவர் அளித்த முக்கிய வாக்குறுதிகள்:

* கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்படும்.

* கோவை மெட்ரோ பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

* கோவையில் ஐஐஎம் கொண்டுவர வலியுறுத்துவோம்.

* கோவையில் இருந்து ஆன்மிக தலங்களுக்கு 10 புதிய ரெயில்கள் இயக்கப்படும்.

* 250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும்.

* கோவை எப்போதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேசிய விளையாட்டு ஆணையத்தின் கிளையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கோவை விமான நிலையம் தரம் உயர்த்தப்படும்.

* காமராஜர் பெயரில் கோவையில் நடமாடும் உணவகங்கள் கொண்டுவரப்படும்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in