காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியிடம் ஆசிபெற்றார் அண்ணாமலை

என் மண் என் மக்கள் பயணம் தொடங்கும் முன்பாக சுவாமிகளை சந்தித்து ஆசிகளைப் பெற்றோம்
காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியிடம் ஆசிபெற்றார் அண்ணாமலை
1 min read

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று (ஆகஸ்ட் 18) காலை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியை சந்தித்து ஆசி பெற்றதாக தன் எக்ஸ் சமூக வலைதள கணக்கில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை பதிவிட்டுள்ளவை பின்வருமாறு:

`இன்றைய தினம், காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் பீடாதிபதி, ஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து, ஆசிகளைப் பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி.

தமிழக பாஜகவின் என் மண் என் மக்கள் பயணம் தொடங்கும் முன்பாகவும், சுவாமிகளைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டிருந்தோம்.

சுவாமிகளை எப்போது சந்திக்கும்போதும், அறநெறிகளையும், நற்சிந்தனைகளையும், எந்தச் சூழ்நிலையிலும் கைவிடாது தொடர வேண்டும் எனும் அவரது அருள் வார்த்தைகள், தர்மத்தின் வழி நடக்கத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.

இந்த சந்திப்பில், தமிழக பாஜகவின் ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் திரு எம். நாச்சியப்பன் மற்றும் பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in