பிரசாரத்தின் கடைசி நாள்: அண்ணாமலை கோவையில் வாக்கு சேகரிப்பு

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
பிரசாரத்தின் கடைசி நாள்: அண்ணாமலை கோவையில் வாக்கு சேகரிப்பு
படம்: https://twitter.com/annamalai_k/status
1 min read

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவையில் இன்று சாலைப் பேரணி மேற்கொண்டார்.

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. பிரசாரத்தின் கடைசி நாளான இன்று அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தங்களுடைய தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை இன்று காலை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வீரபாண்டி, சின்ன தடாகம், மடத்தூர், பாப்பநாயக்கன் பாளையம், தாளியூர், பன்னிமடை, கணுவாய், காளப்பநாயக்கன் பாளையம், அண்ணா நகர், இடையர்பாளையம், டிவிஎஸ் நகர், கேஎன்ஜி புதூர் பிரிவு ஆகிய பகுதிகளில் சாலைப் பேரணி மேற்கொண்டு இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in