
நடிகர் விஜய் அரசியல் களத்தின் தீவிரத் தன்மையை உணர்ந்து முழுநேர அரசியல் செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :
”பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இருவரும் இருக்க வேண்டும். டிடிவி தினகரன் நல்ல தலைவர். நயினார் நாகேந்திரனுக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்காது. திமுகவுக்கு நாங்களே மாற்று எனச் சொல்லும் தவெக, களத்தில் 24 மணி நேரமும் இருக்க வேண்டும். அரசியல் தலைவர் என்றால் 24 மணி நேரமும் களத்தில் இருக்க வேண்டும். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். திமுகவுக்கு மாற்று தவெகா என்று சொல்வதானால் அதைக் களத்தில் காட்ட வேண்டும். தவெகாவுக்கு மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பேரணிகளுக்கும் யாத்திரைகளுக்கும் காவல்துறை அனுமதி மறுப்பது என்பது நடந்திருக்கிறது. அனுமதி ஒரு இடத்தில் மறுக்கப்படுகிறது என்றால், எங்கு அனுமதி வழங்கப்படுகிறதோ அங்கு மக்களைத் திரட்ட வேண்டும். சனிக்கிழமைகளில் மட்டும்தான் பரப்புரை செய்வேன். திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் வேளை செய்ய மாட்டேன் என்று ஒரு தலைவர் சொல்வது அழகல்ல” இவ்வாறு அவர் கூறினார்.
Annamalai | Vijay | BJP | TVK | TN Politics |