ஜூன் 25-ல் அரசியல் சாசன படுகொலை தினம்: மத்திய அரசு அறிவிப்பு

எந்த காரணமும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது
ஜூன் 25-ல் அரசியல் சாசன படுகொலை தினம்: மத்திய அரசு அறிவிப்பு
ANI
1 min read

இனி ஒவ்வொரு வருடமும் ஜூன் 25, அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார். ஜூன் 25, 1975-ல் அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை இந்தியாவில் பிரகடனப்படுத்தினார்.

ஜூன் 25, 1975-ல் அன்றைய இந்திய குடியரசு தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது, பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பெயரில் அவசர நிலையை நாடு முழுவதும் பிரகடனப்படுத்தினார். இதற்கு நாட்டின் உள்ளே மற்றும் வெளியே இருந்து எழுந்த அச்சுறுத்தல் காரணமாகக் குறிப்பிடப்பட்டது. இந்த அவசர நிலை 1975 முதல் 1977 வரையிலான 21 மாத காலம் அமலில் இருந்தது.

இது தொடர்பாக அமித் ஷா பதிவிட்டுள்ள எக்ஸ் கணக்குப் பதிவு பின்வருமாறு:

`1975, ஜூன் 25-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தன் சர்வாதிகார மனநிலையின் வெளிப்பாடாக, நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்த காரணமும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை 'அரசியல் சாசன படுகொலை தினம் (சம்விதன் ஹத்யா திவாஸ்)' என்று கொண்டாட இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலியை அனுபவித்த அனைத்து மக்களின் மகத்தான பங்களிப்பை இந்த நாள் நமக்கு நினைவுபடுத்தும்’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in