அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

அருணாச்சலப் பிரதேசத்தில் இரு மக்களவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமிலுள்ள ஒரேயொரு மக்களவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
படம்: https://twitter.com/PIBGangtok

அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிஷா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறுகின்றன.

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிமில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் சிக்கிமில் உள்ள 32 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.

இதேநேரத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் இரு மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சிக்கிமிலுள்ள ஒரேயொரு மக்களவைத் தொகுதிக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in