சர்ச்சைகளுக்கு மத்தியில் திருப்பதி லட்டு விற்பனை எப்படி உள்ளது?

செப்டம்பர் 19 - 3.59 லட்சம் லட்டுகள் விற்பனை..
புனிதத் தன்மையைக் காக்க பிராயச்சித்தமாக மஹாஷாந்தி யாகம் நடத்தப்பட்டதாக திருப்பதி கோயில் நிர்வாகம் நேற்று தெரிவித்தது.
புனிதத் தன்மையைக் காக்க பிராயச்சித்தமாக மஹாஷாந்தி யாகம் நடத்தப்பட்டதாக திருப்பதி கோயில் நிர்வாகம் நேற்று தெரிவித்தது.ANI
1 min read

திருப்பதி கோயிலில் நான்கு நாள்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன.

ஆந்திரப் பிரதேசத்தில் முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது திருப்பதி கோயிலில் லட்டுவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதன்பிறகு, ஆய்வு முடிவில் லட்டுவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்திருக்கலாம் என உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இருந்தபோதிலும், திருப்பதி கோயில் லட்டு விற்பனையில் இது எந்த சரிவையும் ஏற்படுத்தவில்லை.

கோயில் நிர்வாகம் அளித்த தகவலின்படி, 4 நாள்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

  • செப்டம்பர் 19 - 3.59 லட்சம் லட்டுகள் விற்பனை

  • செப்டம்பர் 20 - 3.17 லட்சம் லட்டுகள் விற்பனை

  • செப்டம்பர் 21 - 3.67 லட்சம் லட்டுகள் விறப்னை

  • செப்டம்பர் 22 - 3.60 லட்சம் லட்டுகள் விற்பனை

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in