4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்ரல் 19, மே 13-ல் வாக்குப்பதிவு

ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஒடிஷா ஆகிய 4 மாநிலங்களிலும் ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்ரல் 19, மே 13-ல் வாக்குப்பதிவு
ANI

ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிஷா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல் தேதிகளை வெளியிட தில்லியிலுள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்தல் துணை ஆணையர்களுடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். இந்த அறிவிப்பின்போது ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஒடிஷா ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டின் விளவங்கோடு உள்பட 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டன.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிஷாவில் மே 13-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக நடைபெறுகிறது. ஒடிஷாவில் நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in