மஹாராஷ்டிர ஆளுநர் பொறுப்பிலிருந்து விலகினார் சி.பி. ராதாகிருஷ்ணன்! | CP Radhakrishnan |

மஹாராஷ்டிர ஆளுநர் பொறுப்பை குஜராத் ஆளுநரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைத்து குடியரசுத் தலைவர் உத்தரவு.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன் மஹாராஷ்டிர ஆளுநர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் கூடுதல் பொறுப்பாக மஹாராஷ்டிர ஆளுநர் பொறுப்பை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் ஜூலை 21-ல் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ல் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இண்டியா கூட்டணி சார்பில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார்.

இத்தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளும் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளையும் பெற்றார்கள். இதன்மூலம், சி.பி. ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?: இங்கே க்ளிக் செய்யவும்...

குடியரசு துணைத் தலைவராகத் தேர்வாகியுள்ள நிலையில், மஹாராஷ்டிர ஆளுநர் பொறுப்பிலிருந்து சி.பி. ராதாகிருஷ்ணன் விலகியுள்ளார். இதைத் தொடர்ந்து, குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் கூடுதல் பொறுப்பாக மஹாராஷ்டிர ஆளுநர் பொறுப்பை ஒப்படைத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

ஆச்சார்யா தேவ்ரத் 2015 முதல் 2019 வரை ஹிமாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்தார். 2019 முதல் குஜராத் ஆளுநராக இருந்து வருகிறார்.

CP Radhakrishnan | Maharashtra Governor | Gujarat Governor | President of India | Acharya Devvrat |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in