அருணாச்சலப் பிரதேசத்தில் 30 இடங்களுக்குப் பெயர் சூட்டிய சீனா

ஏற்கெனவே அருணாச்சல்லில் 2017- ல் 6 இடங்களுக்கும், 2021- ல் 15 இடங்களுக்கும், 2023- ல் 11 இடங்களுக்கும் சீனா பெயரிட்டது.
அருணாச்சலப் பிரதேசத்தில் 30 இடங்களுக்குப் பெயர் சூட்டிய சீனா
அருணாச்சலப் பிரதேசத்தில் 30 இடங்களுக்குப் பெயர் சூட்டிய சீனாANI

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை, அதை ஒட்டி அமைந்துள்ள சீனா, பல ஆண்டுகளாக உரிமை கோரி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையை பலமுறை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடுவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அங்குள்ள ஊர்கள் மற்றும் மலைகள் உட்பட 30 இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் 11 குடியிருப்புப் பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி உட்பட 30 இடங்களுக்கு சீன மொழியில் புதிய பெயர்களை சீன குடிமை விவகாரத்துறை அமைச்சகம் சூட்டி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியை சீன நாளிதழ் வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே அருணாச்சல்லில் 2017- ல் 6 இடங்களுக்கும், 2021- ல் 15 இடங்களுக்கும், 2023- ல் 11 இடங்களுக்கும் சீனா பெயரிட்டது. இதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்களை சூட்டி 4-வது பட்டியலை வெளியிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in