அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக வெற்றி!

பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு (கோப்புப்படம்)
அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு (கோப்புப்படம்)ANI

அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அருணாச்சலப் பிரதேசத்தில் 10 தொகுதிகளில் எதிர்த்துப் போட்டியிட வேட்பாளர்கள் இல்லாததால் பாஜக ஏற்கெனவே 10 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றது. இதில் முதல்வர் பெமா காண்டுவும் ஒருவர்.

மீதமுள்ள 50 இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 23 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 12 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருவதாக நிலவரங்கள் இருந்தன.

இறுதியாக, அருணாச்சலப் பிரதேசத்தில் 46 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மக்கள் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி இரு இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் மூன்று இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in