ரஞ்சி கோப்பைக்கான தில்லி உத்தேச அணியில் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
2024-25 ரஞ்சி கோப்பை அக்டோபர் 11 அன்று தொடங்குகிறது. இந்நிலையில் ரஞ்சி கோப்பைக்கான தில்லி உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
84 வீரர்கள் கொண்ட இப்பட்டியலில் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், அதே ரஞ்சி கோப்பை நடைபெறும் அதே சமையத்தில் இந்திய அணி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுடன் விளையாடவுள்ளதால், ரஞ்சி கோப்பையில் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் விளையாடுவது சந்தேகம் என்றே தெரிகிறது.
தில்லி உத்தேச அணியில் ஹர்ஷித் ராணா, நவ்தீப் சைனி போன்ற வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். மூத்த வீரர் இஷாந்த் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
விராட் கோலி கடைசியாக 2012-ல் நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் பங்கேற்றார்.