
ரஞ்சி கோப்பை இரண்டாவது காலிறுதியில் தமிழ்நாடு அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பாவிடம் தோல்வியடைந்துள்ளது.
ரஞ்சி கோப்பையில் காலிறுதிச் சுற்று நடைபெற்று வருகிறது. இரண்டாவது காலிறுதியில் தமிழ்நாடு அணி நாக்பூரில் விதர்பாவை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த விதர்பா, கருண் நாயரின் சதத்தால் 353 ரன்கள் குவித்தது.
தமிழ்நாடு அணி பேட்டிங்கில் சொதப்பி 225 ரன்களுக்கு சுருண்டது. ஆண்ட்ரே சித்தார்த் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். விதர்பாவில் ஆதித்ய தாக்கரே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய விதர்பாவில் யஷ் ரதோட் 112 ரன்கள் குவித்தார். ஹர்ஷ் துபே 64 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்டர்கள் பெரிய ஸ்கோர் எடுக்காததால், அந்த அணி 272 ரன்களுக்கு சுருண்டது.
பந்துவீச்சில் கலக்கிய தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எனினும் தமிழ்நாடு அணிக்கு 401 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கிலும் தமிழ்நாடு பேட்டர்கள் சொதப்பினார்கள். பிரதோஷ் ரஞ்சன் பால் மற்றும் சோனு யாதவ் ஆகியோர் அரைசதம் அடித்தார்கள். வேறு எவரும் 20 ரன்களை கூடத் தொடவில்லை.
202 ரன்களுக்கு சுருண்டது தமிழ்நாடு அணி. 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விதர்பா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.