ரஞ்சி கோப்பை: ரயில்வேயை வீழ்த்தியது தமிழ்நாடு

டி பிரிவில் 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ்நாடு 2 வெற்றிகள், 3 டிராவுடன் 19 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
ரஞ்சி கோப்பை: ரயில்வேயை வீழ்த்தியது தமிழ்நாடு
1 min read

ரஞ்சி கோப்பையில் ரயில்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரஞ்சி கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி, தனது 5-வது ஆட்டத்தில் ரயில்வேவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற தமிழ்நாடு பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ரயில்வே அணி 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஜித் ராம் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஹமது அலி 91 ரன்களும் எம் ஷாருக் கான் 86 ரன்களும் ஆண்ட்ரே சித்தார்த் 78 ரன்களும் என் ஜெகதீசன் 56 ரன்களும் எடுத்தார்கள்.

ரயில்வே அணி 209 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்திருந்தது. முஹமது சயிஃப் 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அடுத்த 15 ரன்களுக்குள் ரயில்வேயின் கடைசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழ்நாடு அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு அணி பெறும் 2-வது வெற்றி இது. டி பிரிவில் 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ்நாடு 2 வெற்றிகள், 3 டிராவுடன் 19 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in