பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஐசிசி விதிமுறைகளை மீறியதற்காக ஷகிப் அல் ஹசனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் இரு ஆட்டங்கள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வங்கதேசம் வரலாறு படைத்தது.
இந்த ஆட்டத்தின் 5-வது நாளில் ஷகிப் அல் ஹசன் பந்துவீசும்போது, பேட்டிங் செய்து கொண்டிருந்த ரிஸ்வான் அந்த நேரத்தில் தான் தயாராக இல்லை என்பதை தெரிவித்து சைகை காட்டினார்.
இதனால் கோபம் அடைந்த ஷகிப் அல் ஹசன் ரிஸ்வானின் தலைக்கு மேலே பந்தை எறிந்தார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து ஷகிப் அல் ஹசனின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஐசிசி விதிமுறைகளை மீறியதாகக் கூறி ஷகிப் அல் ஹசனுக்கு ஆட்டத்தின் கட்டணத்திலிருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ஒரு அபராதப் புள்ளியை வழங்கியது ஐசிசி.