ரஞ்சி கோப்பை: ரயில்வேஸ் அணியை திணறடித்த தமிழக அணி!

ரஞ்சி கோப்பை: ரயில்வேஸ் அணியை திணறடித்த தமிழக அணி!

ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்ஸில் 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
Published on

தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில், பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரயில்வேஸ் அணி தடுமாறியது.

தமிழ்நாடு - ரயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் இன்று அஹமதாபாதில் தொடங்கியது.

ஆரம்பம் முதல் தமிழக அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரயில்வேஸ் அணி தடுமாறியது.

அதன் பிறகு முஹமது சைஃப் 60 ரன்களும், பார்கவ் 53 ரன்களும், சூரஜ் அகுஜா 52 ரன்களும் எடுக்க ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்ஸில் 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தமிழக அணியில் அதிகபட்சமாக அஜித் ராம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய தமிழக அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in