ரஞ்சி கோப்பை: வலுவான நிலையில் தமிழக அணி!

ஷாருக் கான் 86 ரன்களும், ஆண்ட்ரே சித்தார்த் 78 ரன்களும், ஜெகதீசன் 56 ரன்களும் எடுத்தனர்.
ரஞ்சி கோப்பை: வலுவான நிலையில் தமிழக அணி!
@TNCACricket
1 min read

ரயில்வே அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 95 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது தமிழக அணி.

தமிழ்நாடு - ரயில்வே அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நேற்று (நவ.13) அஹமதாபாதில் தொடங்கியது.

ஆரம்பம் முதல் தமிழக அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரயில்வே அணி தடுமாறியது.

முஹமது சைஃப் 60 ரன்களும், பார்கவ் 53 ரன்களும், சூரஜ் அகுஜா 52 ரன்களும் எடுக்க ரயில்வே அணி முதல் இன்னிங்ஸில் 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தமிழக அணியில் அதிகபட்சமாக அஜித் ராம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய தமிழக அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷாருக் கான், கேப்டன் ஜெகதீசனுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். இருவரும் எதிரணிக்கு நெருக்கடி அளித்தனர். அசத்தலாக விளையாடிய இருவரும் அரைசதம் அடிக்க இந்த கூட்டணி 137 ரன்கள் எடுத்தது.

ஷாருக் கான் 86 ரன்களிலும், ஜெகதீசன் 56 ரன்களிலும் வெளியேறினர். சராசியாக ஓவருக்கு 4 ரன்கள் எடுத்தது தமிழக அணி.

நடுவரிசையில் களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் 38 ரன்களும், ஆண்ட்ரே சித்தார்த் 78 ரன்களும் எடுக்க தமிழக அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது. முஹமது அலி ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுத்தார்.

4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், முதல் இன்னிங்ஸில் 95 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது தமிழக அணி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in