ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்!

இந்தியா 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்!
ANI
1 min read

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி செப். 8 அன்று சீனாவில் தொடங்கியது.

இதன் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் கொரியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஹர்மன்பிரீத் சிங் (2 கோல்கள்), ஜர்மன்பிரீத் சிங், உத்தம் சிங் ஆகியோர் கோல் அடித்தனர்.

இதன் மூலம் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது.

ஆரம்பம் முதல் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இரு அணிகளும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தின.

இருப்பினும் 3-வது பகுதியான 45-வது நிமிடத்தின் முடிவில் 0-0 என்ற கணக்கில் சமமாக இருந்தது. ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் இந்தியாவின் ஜுக்ராஜ் சிங் சிறப்பான ஒரு கோலை அடிக்க இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதிவரை போராடியும் சீனாவால் கோல் அடிக்க முடியவில்லை.

எனவே இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன் மூலம் இந்தியா 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

முன்னதாக 2023-ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றது.

முன்னதாக, பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கியின் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி ஸ்பெயினை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in