முதலில் தேநீர் இடைவேளை, பிறகு உணவு இடைவேளை: டெஸ்டில் முதல்முறையாக நேரம் மாற்றம்! | Guwahati Test | IND v SA |

இதற்கு முன்பு, ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் இதுபோல நேரம் மாற்றியமைத்ததுண்டு.
India v South Africa Guwahati Test: Tea comes before Lunch as a unique feat
குவஹாத்தி மைதானம் (கோப்புப்படம்)ANI
1 min read

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே குவஹாத்தியில் நடைபெறும் டெஸ்டில் வழக்கத்துக்கு மாறாக ஆட்ட நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அடுத்த மாதம் பயணம் செய்யும் தென்னாப்பிரிக்க அணி இரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் நவம்பர் 22 அன்று குவஹாத்தியில் தொடங்குகிறது.

இந்தியாவில் நடைபெறும் டெஸ்டுகள் வழக்கமாக காலை 9.30 மணிக்குத் தொடங்கும். மாலை 4.30 மணிக்கு நிறைவடையும். டெஸ்டில் வழக்கமாக முதல் பகுதி ஆட்டம் முடிவடைந்தவுடன் 40 நிமிடங்களுக்கு உணவு இடைவேளை எடுக்கப்படும். இரண்டாவது பகுதி ஆட்டம் முடிந்தவுடன் தேநீர் இடைவேளை எடுக்கப்படும்.

ஆனால், இந்த மரபுகளுக்கு மாறாக குவஹாத்தி டெஸ்டில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குவஹாத்தியில் சூரியன் முன்கூட்டியே உதயமாகி அஸ்தமனம் ஆவதால், நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது, இந்தியாவில் வழக்கமாக காலை 9.30 மணிக்குத் தொடங்கும் டெஸ்ட் குவஹாத்தியில் மட்டும் காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. காலை 11 மணிக்கு தேநீர் இடைவேளை எடுக்கப்படுகிறது. காலை 11.30 மணிக்கு உணவு இடைவேளை எடுக்கப்படுவது தான் மரபு.

இதைத் தொடர்ந்து, பகல் 1.20 மணிக்கு உணவு இடைவேளை எடுக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு ஆட்டம் முடிவடைகிறது.

ஆட்டநேர விவரம்

  • முதல் பகுதி - காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை

  • தேநீர் இடைவேளை - காலை 11 மணி முதல் காலை 11.20 மணி வரை

  • இரண்டாவது பகுதி - காலை 11.20 மணி முதல் பகல் 1.20 மணி

  • உணவு இடைவேளை - பகல் 1.20 மணி முதல் பகல் 2 மணி வரை

  • மூன்றாவது பகுதி - பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை

பிசிசிஐ மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இணைந்து இந்த நேர மாற்றத்தை முடிவு செய்துள்ளன. இதற்கு முன்பு, ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் இதுபோல நேரம் மாற்றியமைத்ததுண்டு. ஆனால், டெஸ்டில் நேரம் மாற்றியமைப்பது இதுவே முதல்முறை.

Summary

India v South Africa Guwahati Test: Tea comes before Lunch as a unique feat due to early sunrise and early sunset

Ind v SA | India v South Africa | Guwahati Test | Test Time Change |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in