தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர்: இந்திய அணிக்கான கேப்டன் அறிவிப்பு! | IND v SA |

இந்திய அணியில் ருதுராஜ் கெயிக்வாட், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, திலக் வர்மா சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
India Squad announced for ODI Series against South Africa
ரோஹித் சர்மா, விராட் கோலி (கோப்புப்படம்)
2 min read

தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

ஷுப்மன் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக விளையாட முடியாத சூழல் உள்ளதால், கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டம் நவம்பர் 30 அன்று ராஞ்சியில் நடைபெறுகிறது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார்கள். எனவே, இந்தத் தொடரிலிருந்து இருவரும் விலகியுள்ளார்கள். கேப்டன் பொறுப்புக்கான போட்டியில் கேஎல் ராகுல், அக்‌ஷர் படேல், ரிஷப் பந்த் இருந்தார்கள்.

கேஎல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணியில் ருதுராஜ் கெயிக்வாட் இடம்பெற்றுள்ளார். ரிஷப் பந்த் 2024-க்கு பிறகு முதல்முறையாக ஒருநாள் அணியில் தேர்வாகியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்த ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், அக்‌ஷர் படேல், முஹமது சிராஜ் ஆகியோர் தென்னாப்பிரிக்க தொடரில் சேர்க்கப்படவில்லை. இவர்களுக்குப் பதில் மாற்று வீரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், திலக் வர்மா, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் திலக் வர்மா விளையாடியிருந்தார். ஷ்ரேயஸ் இல்லாததால், நடுவரிசையைப் பலப்படுத்த இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

முஹமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒருநாள் தொடரிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஹார்திக் பாண்டியா இன்னும் காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார்.

இந்திய அணி

ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெயிஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெயிக்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரெல்.

ஒருநாள் தொடருக்கான அட்டவணை

  • முதல் ஒருநாள் ஆட்டம் - நவம்பர் 30, ராஞ்சி

  • 2-வது ஒருநாள் ஆட்டம் - டிசம்பர் 3 ராய்பூர்

  • 3-வது ஒருநாள் ஆட்டம் - டிசம்பர் 6 விசாகப்பட்டினம்

Summary

BCCI announced India Squad announced for ODI Series against South Africa. KL Rahul to lead the team in the absence of Shubman Gill and Shreyas Iyer.

India Squad | Team India | IND v SA | KL Rahul | Rishabh Pant | Ruturaj Gaikwad | Shubman Gill | Shreyas Iyer | Tilak Varma | Ravindra Jadeja | Rohit Sharma | Virat Kohli |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in