மூர்ச்சையாகி விழுந்து களத்திலேயே உயிரிழந்த 17 வயது பேட்மிண்டன் வீரர்!

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜாங் ஜி
ஜாங் ஜி

சீனாவை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஜாங் ஜி விளையாடி கொண்டிருந்த போது மூர்ச்சையாகி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

17 வயதான ஜாங் ஜி இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். ஜப்பான் வீரருக்கு எதிராக விளையாடி கொண்டிருந்த அவர் திடீரென கீழே விழுந்தார். மீண்டும் அவர் எழாத நிலையில் மருத்துவர்கள் வந்து அவரை பரிசோதித்து பார்த்தார்கள்.

இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாங் ஜி மரணம் அடைந்ததற்கான காரணம் குறித்து எந்த விவரங்களும் தெரியவில்லை.

இவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.https://x.com/wideawake_media/status/1807734984213397693

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in