ரஞ்சி கோப்பை: அரையிறுதியில் களமிறங்கும் ஸ்ரேயஸ் ஐயர்

முதுகுத் தசைப்பிடிப்பு காரணமாக ஸ்ரேயஸ் ஐயர் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் மும்பை அணியில் இடம்பெற்றார்.
ஸ்ரேயஸ் ஐயர்
ஸ்ரேயஸ் ஐயர்ANI
1 min read

ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் மும்பை அணிக்காக ஸ்ரேயஸ் ஐயர் விளையாட உள்ளார்.

மார்ச் 2 அன்று தொடங்கும் அரையிறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு அணி மும்பையையும், விதர்பா அணி மத்தியப் பிரதேச அணியையும் எதிர்கொள்கின்றன.

முதுகுத் தசைப்பிடிப்பு காரணமாக ஸ்ரேயஸ் ஐயர் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்டுகளில் பங்கேற்கவில்லை. மேலும், ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்காக ஸ்ரேயஸ் ஐயர் விளையாட உள்ளார்.

மேலும் நீண்ட நாள்களாக ஓய்வில் இருந்த இஷான் கிஷன் சமீபத்தில் உள்ளூர் டி20 போட்டியில் பங்கேற்றார். கடைசியாக டிசம்பர் மாதத்தில் இந்திய அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் ரஞ்சி கோப்பையிலும் பங்கேற்கவில்லை.

logo
Kizhakku News
kizhakkunews.in