
பிரபல வீரரும் கர்நாடக அணியின் கேப்டனுமான 32 வயது மயங்க் அகர்வால், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழுமையாகக் குணமடைந்து மீண்டும் களமிறங்க உள்ளார்.
ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக அகர்தலாவில் இருந்து தில்லி வழியாகச் சூரத்திற்குப் பயணம் செய்தபோது மயங்க் அகர்வாலுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மயங்க் அகர்வால் தற்போது முழுமையாகக் குணமடைந்து மீண்டும் அணியில் இணைந்தார். மேலும் தான் நலமாக இருப்பதாகவும், வேறு எந்த தொந்தரவும் இல்லை எனவும் மயங்க் அகர்வால் கூறியுள்ளார். பிப்.9 அன்று நடைபெறவுள்ள தமிழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் மயங்க் அகர்வால் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மயங்க் அகர்வால் விளையாடாத காரணத்தால் கடந்த ஆட்டத்தில் கர்நாடக அணியை இளம் வீரரான நிகின் ஜோஸ் வழிநடத்தினார். ரயில்வேஸ் அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் கர்நாடக அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் ஒரு சதம், இரு அரை சதங்களுடன் 310 ரன்கள் குவித்துள்ளார் மயங்க் அகர்வால்.