
பிரபல நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் 2018-ல் வெளியான கீதா கோவிந்தம் படத்திலும் பிறகு 2019-ல் வெளியான டியர் காம்ரேட் படத்திலும் சேர்ந்து நடித்திருந்தார்கள்.
இருவரும் நீண்ட காலமாக நெருக்கமாகப் பழகி வருவதாகவும் விரைவில் திருமண அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்பட்டு வந்தன. எனினும் தங்களுடைய காதலை இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் வெள்ளியன்று இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கெடுத்ததாகத் தெரிகிறது. நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. நிச்சயதார்த்தம் குறித்து விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கவில்லை.
எனினும், இச்செய்தியை ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் உறுதி செய்துள்ளது. விஜய் தேவரகொண்டா தரப்பு சார்பில் திருமண நிச்சயம் குறித்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Vijay Deverakonda | Rashmika Mandanna | Wedding | Wedding Engagement | Engagement |