விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி@vijayantony

இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது: விஜய் ஆண்டனி

நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தபடுத்தியதால், உங்களைப்போன்ற சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது.
Published on

கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்தியதாக நடிகர் விஜய் ஆண்டனி மீது தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி பேசியதாவது:

“அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் உருப்பினர்களே, நான் முன்தினம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறி இருந்தேன்.

ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளைத் தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தபடுத்தியதால் உங்களைப்போன்ற சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.

நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in