துபாய் 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
அஜித் குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியைத் தொடங்கியுள்ள அஜித் குமார், துபாயில் நடைபெறும் 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். இதில் அணியின் உரிமையாளராக மட்டுமில்லாமல் ஜிடி3 கார் பந்தயத்தில் ஓட்டுநராகவும் அஜித் குமார் பங்கேற்றுள்ளார்.
பயிற்சியின்போது விபத்து ஏற்பட்டதன் காரணத்தால், அணியின் நலன் கருதி போர்ஷ் 992 கப் கார் போட்டியிலிருந்து அஜித் குமார் ஓட்டுநராகப் பங்கேற்காமல் விலகினார். இவருடைய அணி இதில் போட்டியிட்டது.
தற்போது 992 போட்டியில் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இந்த வெற்றியை அஜித் குமார் உள்பட அவருடைய அணி மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடியது.
அஜித் குமார் தேசியக் கொடியை ஏந்தி வெளியே வந்து வெற்றி மகிழ்ச்சியைக் கொண்டாடினார். குடும்பத்தினரைச் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மனைவி ஷாலினியும் அஜித் குமாரைக் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்தார்.
அஜித் குமார் அணியின் கார் பந்தய வெற்றிக் கொண்டாட்டத்தில் மாதவனும் உடனுள்ளார்.