ரசிகர்களிடம் ‘ஸ்டார்’ இயக்குநர் வேண்டுகோள்

“ஸ்டார் படத்தில் உள்ள மூன்று முக்கியமான ஆச்சர்யங்களை, படம் பார்த்த ரசிகர்கள் வெளியில் சொல்ல வேண்டாம்”.
நாளை வெளியாகும் ‘ஸ்டார்’
நாளை வெளியாகும் ‘ஸ்டார்’@elann_t

ஸ்டார் படத்தில் உள்ள 3 முக்கியமான ஆச்சர்யங்களை, படம் பார்த்த ரசிகர்கள் வெளியில் சொல்ல வேண்டாம் என இயக்குநர் இளன் தெரிவித்துள்ளார்.

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கியவர் இளன். தற்போது கவின் நடிப்பில் ஸ்டார் என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குநர் இளன் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “இப்படத்தை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன். ஸ்டார் படத்தில் உள்ள 3 முக்கியமான ஆச்சர்யங்களை, படம் பார்த்த ரசிகர்கள் வெளியில் சொல்ல வேண்டாம். அதனை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து அனுபவிக்க வேண்டும் என எனக்குள் இருக்கும் கலைஞன் ஆசைப்படுகிறான்” என்றார்.

இளனின் தந்தை ஸ்டில்ஸ் பாண்டியன் அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தில், ஜெய்யின் தந்தையாக நடித்திருப்பார். தனது தந்தையின் கதையை மையமாகக் கொண்டுதான் ‘ஸ்டார்’ படத்தை இயக்கியதாக இளன் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in