சின்னத்திரை நடிகர் வெற்றி வசந்த் - வைஷ்ணவி ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை தொடரின் மூலம் பிரபலமடைந்தார் வெற்றி வசந்த். இவருக்கும் பொன்னி தொடரில் நாயகியாக நடித்து வரும் வைஷ்ணவிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர்.
இந்நிலையில் வெற்றி வசந்த் - வைஷ்ணவி ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் பெற்றோர்கள், நண்பர்கள், சின்னத்திரைப் பிரபலங்கள் எனப் பலர் முன்னிலையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருமண நிச்சயதார்த்தப் புகைப்படங்கள்
https://kizhakkunews.in/ampstories/webstories/vetri-vasanth-vaishnavi-engagement