டிவி பிரபலங்கள் வெற்றி வசந்த் - வைஷ்ணவி நிச்சயதார்த்தம்
யோகேஷ் குமார்
சின்னத்திரை நடிகர் வெற்றி வசந்த் - வைஷ்ணவி ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
திருமண நிச்சயதார்த்தம் குறித்து இருவரும் சமீபத்தில் தங்களின் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் வெற்றி வசந்தும், பொன்னி தொடரில் வைஷ்ணவியும் நடித்து வருகின்றனர்.
வெற்றி வசந்த் - வைஷ்ணவி ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.