‘வடக்கன்’ படத்தின் தலைப்பை ‘ரயில்’ என மாற்றி படக்குழு அறிவிப்பு!

"படத்தின் வெளியீட்டுத் தேதி வெகு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது".
‘வடக்கன்’ படத்தின் தலைப்பை ‘ரயில்’ என மாற்றி படக்குழு அறிவிப்பு!
‘வடக்கன்’ படத்தின் தலைப்பை ‘ரயில்’ என மாற்றி படக்குழு அறிவிப்பு!@onlynikil

பிரபல எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள ‘வடக்கன்’ படத்தின் பெயரை ‘ரயில்’ என மாற்றி படக்குழு அறிவித்துள்ளது.

வெண்ணிலா கபடி குழு, எம் மகன், நான் மகான் அல்ல உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் பாஸ்கர் சக்தி, தேசிய விருது பெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்கும் கதை, வசனம் எழுதியிருந்தார். இந்நிலையில் அவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்துக்கு ‘வடக்கன்’ என முதலில் பெயரிடப்பட்டது. இந்த தலைப்புக்கு தணிக்கைக் குழு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது ‘ரயில்’ என்ற தலைப்புடன் வெளியாக உள்ளது.

இப்படத்தில் குங்குமராஜ் முத்துச்சாமி, வைரமாலா, ரமேஷ் வைத்யா உட்பட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. வடக்கன் என தலைப்பு கொண்ட இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளும், வசனங்களும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில் படத்தின் பெயரை ‘ரயில்’ என மாற்றி படக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், “எங்கள் 'வடக்கன்' படத்தின் பெயர் 'ரயில்' என்று மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

படத்தின் வெளியீட்டுத் தேதி வெகு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. உங்கள் அனைவரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in