குட் பேட் அக்லி: முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
படம்: x.com/MythriOfficial
படம்: x.com/MythriOfficial
1 min read

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அஜித்தின் 63-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கெனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படத் தலைப்புக்கு ஏற்றவாறு அஜித் மூன்று குணாதிசயங்களுடன் உள்ளார்.

இதன் படப்பிடிப்பு ஜூனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

logo
Kizhakku News
kizhakkunews.in