தீனா மறுவெளியீடு: தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து ரசிகர்கள் ரகளை! (விடியோ)

நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் தீனா திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு தீனா திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் திரையரங்கினுள் பட்டாசு வெடித்து படத்தைக் கொண்டாடியுள்ளார்கள்.

நடிகர் அஜித் குமார் இன்று 53-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். உச்ச நட்சத்திரங்களின் பிறந்தநாளின்போது அவர்களுடைய பழைய படங்கள் மீண்டும் திரையில் திரையிடுவது வழக்கமாகியுள்ளது.

இதன் அடிப்படையில் விஸ்வாசம், தீனா உள்ளிட்ட அஜித்தின் வெற்றித் திரைப்படங்கள் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகியுள்ளன. சென்னையில் ரோஹிணி, வெற்றி உள்ளிட்ட திரையரங்குகளில் தீனா படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ரோஹிணி திரையரங்கில் ரசிகர்கள் ஆடிப் பாடி குத்தாட்டம்போட்டு ரசித்தது ஒருபுறம் இருந்தது. அதேநேரம், தீனா படத்தில் நடிகர் அஜித் வத்திக்குச்சி பத்திக்காது பாடலைப் பாட, ரசிகர்கள் திரையரங்கினுள் பட்டாசைப் பற்றவைத்து பாடலைக் கொண்டாடியுள்ளார்கள்.

இதுதொடர்பான காணொலி இணையத்தில் அதிகளவில் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in