‘ஸ்டார்’ இயக்குநரின் படத்தில் தனுஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

"மதுரையை அடிப்படையாக கொண்ட அந்த கதையை படமாக எடுக்க இரண்டு பேருமே ஆவலுடன் காத்திருக்கிறோம்".
தனுஷ்
தனுஷ்ANI

‘ஸ்டார்’ படத்தின் இயக்குநரான இளன், தனுஷுடன் சேர்ந்து பணியாற்றப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கியவர் இளன். தற்போது கவின் நடிப்பில் ஸ்டார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் தனுஷுடன் சேர்ந்து பணியாற்றப் போவதாகத் சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

“தனுஷை வைத்து படம் இயக்குவது உறுதி. அது எனக்கும், தனுஷூக்கும் மிகவும் பிடித்த கதை. அந்த கதை மீது தனுஷ் அதிகமான நம்பிக்கையை வைத்துள்ளார். கடமைக்காக அந்த படத்தை எடுக்க வேண்டாம் என்பதில் தனுஷ் தெளிவாக உள்ளார். மதுரையை அடிப்படையாக கொண்ட அந்த கதையை படமாக எடுக்க இரண்டு பேருமே ஆவலுடன் காத்திருக்கிறோம். சரியான நேரத்தில் அந்த படம் நடக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

ஏற்கெனவே தனுஷ் ராயன், தெலுங்கில் குபேரா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இயக்குநர் மாரி செல்வராஜுடன் ஒரு படம், இளையராஜாவின் வாழ்க்கை படம் என அடுத்தடுத்து பல படங்களில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் இளனுடனான படத்தை அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in