சின்ன படத்தை எடுத்துட்டு போராட வேண்டியிருக்கு: நடிகர் சமுத்திரகனி உருக்கம்

“அப்பா, நாடோடிகள் படங்களுக்குப் பிறகு படம் எடுக்கும் எண்ணமே குறைந்துவிட்டது”.
நடிகர் சமுத்திரகனி
நடிகர் சமுத்திரகனி

சின்ன படங்களை எடுத்துவிட்டு போராட வேண்டியிருப்பதாக நடிகர் சமுத்திரகனி பேசியுள்ளார்.

சமுத்திரக்கனி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இவ்விழாவில் சமுத்திரக்கனி, இயக்குநர் பாலா, சூரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சமுத்திரக்கனி பேசியதாவது:

“ஒரு சின்ன படத்தை எடுத்துவிட்டு ஒவ்வொரு முறையும் போராட வேண்டியுள்ளது. ‘அப்பா’ படத்திற்கு இப்போது வரை எனக்கு கணக்கு வரவில்லை. அது மக்களிடம் சென்றடைந்ததா? படம் வெற்றியா? தோல்வியா? என்ற எதுவும் சொல்லப்படுவதில்லை.

இதற்கு மத்தியில் இதுபோன்ற படத்தை மீண்டும் கொண்டு வருவது தயக்கமாக இருந்தது. அப்பா, நாடோடிகள் படங்களில் நான் சந்தித்த சில அனுபவங்களுக்குப் பிறகு படம் எடுக்கும் எண்ணமே குறைந்துவிட்டது.

ஒரு படத்தை பேரன்போடு எடுக்கிறோம். ஆனால், அதனை எங்கு கொண்டு வைப்பது என்று தெரியவில்லை. இப்படத்தையும் அதேபோல எடுத்து வந்துள்ளோம், இதற்கு வெளிச்சம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in