உலக முதலீட்டாளர்கள் மாநாடு: பலன்களும் பிரச்னைகளும் பற்றி பத்ரி சேஷாத்ரி

ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில் கடந்த இரு நாள்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த தொழில் நிறுவனங்கள், இந்தியாவிலுள்ள முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன.

இந்த மாநாட்டின் மூலம் ரூ. 5 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட வேண்டும் என தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.

ஆனால், தமிழக அரசு இலக்கு நிர்ணயித்ததைக் காட்டிலும் கூடுதலாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த மாநாட்டினுடைய பலன்கள் மற்றும் பிரச்னைகள் பற்றி தனது கருத்துகளைத் தெரிவிக்கிறார் பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி.

logo
Kizhakku News
kizhakkunews.in