குடியேற்றவாசிகளுக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த தங்க அட்டை திட்டம்: அம்சங்கள் என்ன?

10 மில்லியன் தங்க அட்டைகள் விற்பனை செய்து அதன் மூலம் அமெரிக்க அரசின் நிதிப்பாற்றாக்குறை குறைக்க அதிபர் டிரம்ப் திட்டமிடுகிறார் என்று கூறப்படுகிறது.
குடியேற்றவாசிகளுக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த தங்க அட்டை திட்டம்: அம்சங்கள் என்ன?
REUTERS
1 min read

அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்காக `தங்க அட்டை’ திட்டத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும், 5 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக கடந்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வருபவர்களை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சட்டப்பூர்வமான குடியேற்றத்தின் மூலம் அமெரிக்க அரசுக்கான வருமானத்தைப் பெருக்கும் வகையில், புதிய திட்டத்தை அறிவித்துள்ளார் அதிபர் டிரம்ப். `நாங்கள் தங்க அட்டையை விற்பனை செய்யவிருக்கிறோம். இந்த அட்டைக்கான தொகை 5 மில்லியன் டாலர்கள் என நிர்ணயம் செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார் டிரம்ப்.

அமெரிக்காவில் குடியேற விரும்பும் முதலீட்டாளர்கள், அந்நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் குறைந்தபட்சம் 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்தால், அவர்களுக்கு கிரீன் கார்டுகளை வழங்கும் வகையிலான இ.பி.5 விசா திட்டம் தற்போது அமலில் உள்ளது.

இந்த இ.பி.5 விசா திட்டத்துக்கு மாற்றாக, `தங்க அட்டை’ நடைமுறை இருக்கும் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தகவல் தெரிவித்துள்ளார்.

வேலை வாய்ப்பை உருவாக்குவது இ.பி.5 விசா திட்டத்தின் நோக்கமாகும் இருக்கும் வேளையில், தங்க அட்டை திட்டம் மூலம் அமெரிக்க அரசுக்கு நேரடியாக வருமானம் கிடைக்கும். 10 மில்லியன் தங்க அட்டைகள் விற்பனை செய்து அதன் மூலம் அமெரிக்க அரசின் நிதிப்பாற்றாக்குறை குறைக்க அதிபர் டிரம்ப் திட்டமிடுகிறார் என்று கூறப்படுகிறது.

அதேநேரம் இந்த தங்க அட்டை திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதையும் டிரம்ப் வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in