ஆபரேஷன் சிந்தூரின்போது எங்களுக்கு ‘தெய்வக் குறியீடு’ கிடைத்தது: பாக். பாதுகாப்புத் தலைவர் | Operation Sindoor |

மக்காவின் புனித கோட்பாடுகளைக் காப்பாற்றும் பொறுப்பை இறைவன் நமக்கு வழங்கியிருக்கிறான்.....
ஆபரேஷன் சிந்தூரின்போது எங்களுக்கு “தெய்வக் குறியீடு” கிடைத்தது: பாக். பாதுகாப்புத்துறை தலைவர்
ஆபரேஷன் சிந்தூரின்போது எங்களுக்கு “தெய்வக் குறியீடு” கிடைத்தது: பாக். பாதுகாப்புத்துறை தலைவர்ANI
1 min read

ஆபரேஷன் சிந்தூர் நடந்தபோது தங்களுக்கு தெய்வீகக் குறியீடு கிடைத்தது என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத் தலைவர் அசீம் முனிர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நேபாளி உள்பட 26 பேர் உயிரிழந்தார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களைக் குறிவைத்து மே 7 அன்று நள்ளிரவு இந்தியா தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 4 நாள்கள் தாக்குதல் நடைபெற்ற நிலையில், மே 10 அன்று நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த தேசிய அளவிலான மாநாடு ஒன்றில் அந்நாட்டின் பாதுகாப்புத் தலைவர் அசீம் முனீர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியபோது ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும் குறிப்பிட்டுப் பேசினார். அவர் கூறியதாவது:-

“இந்தியா நம் மீது தாக்குதல் நடத்தியபோது இஸ்லாமாபாத்திற்கு தெய்வத்தின் அருளால் அசரீரி போல் சில குறியீடுகள் முன்கூட்டியே கிடைத்தன. நாம் அந்தத் தாக்குதலை முன்கூட்டியே உணர்ந்தோம். மொத்தம் 57 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அவற்றில் நமக்கு மட்டும் மக்காவின் புனித கோட்பாடுகளைக் காப்பாற்றும் பொறுப்பையும் பெருமையும் இறைவன் நமக்கு வழங்கியிருக்கிறான். தலிபான் அரசு பயங்கரவாத அமைப்பான டிடிபியை ஆதரிக்கப் போகிறதா பாகிஸ்தானுடன் நிற்கப் போகிறதா என்று முடிவெடுக்க வேண்டும். டிடிபி மூலம் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அதிகாரம் உள்ளவர்களின் உத்தரவு, அனுமதி மற்றும் விருப்பம் இல்லாமல் யாரும் போராட்டத்திற்கான ஆணையப் பிறப்பிக்க முடியாது” என்று பேசினார்.

Summary

Pakistan's Defence Chief, Field Marshal Asim Munir, has claimed that Islamabad received 'divine help' during the country's military confrontation with India in May after India struck terror targets under Operation Sindoor. 

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in