சிஏஏ சட்டம்: உன்னிப்பாகக் கண்காணிக்கும் அமெரிக்கா

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமலாக்கப்படுவது குறித்தும் இந்தச் சட்டம் செயல்படுத்தப்படுவதையும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிஏஏ சட்டம்: உன்னிப்பாகக் கண்காணிக்கும் அமெரிக்கா


இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமலாக்கப்படுவது குறித்தும் இந்தச் சட்டம் செயல்படுத்தப்படுவதையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியா முழுவதும் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மதத் துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்குப் புலம்பெயரும் முஸ்லிம்கள் நீங்கலாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயினர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களுக்கு இந்திய குடியுரிமையை விரைவாக வழங்க வழிவகை செய்கிறது. இவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.

இந்நிலையில் சிஏஏ சட்டம் பற்றி அமெரிக்கா தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.

"மார்ச் 11 அன்று குடியுரிமை திருத்தச் சட்டம் அறிவிக்கப்பட்டது குறித்து நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை மற்றும் அனைத்து சமூகங்களும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது அடிப்படை ஜனநாயகக் கொள்கைகள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in