

பிரிட்டனில் லண்டன் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலில் பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.
இங்கிலாந்தில் சனிக்கிழமை மாலை டான்காஸ்டர் நகரிலிருந்து லண்டன் நோக்கி ரயில் சென்றுகொண்டிருந்தது. பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பாதை இது என்று சொல்லப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு பீட்டர்பரோ ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டுள்ளது. இதிலிருந்து சிறிது நேரத்தில் பயணிகள் மீது கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவு 7.39 மணியளவில் அபாய எச்சரிக்கை ஒலிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, பெரிய கத்தியுடன் ஒருவர் இருந்திருக்கிறார், எங்கு பார்த்தாலும் ரத்தம் என்றிருக்கிறார். ஹண்டிங்டனில் ரயில் நின்றபோது, சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதலில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளார்கள். இவர்களில் 9 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பிரிட்டிஷ் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் கூறுகையில், "10 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். 9 பேருக்கு உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்புடைய விசாரணைக்கு பயங்கரவாதத் தடுப்புக் காவல் துறையும் உதவுகிறது.
பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் இச்சம்பவம் பற்றி கூறுகையில், மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அங்கு ரயில் சேவை சற்று பாதிக்கப்பட்டது. மேலும், லண்டனில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
At least 10 people were injured, with nine sustaining life-threatening injuries, after a multiple stabbing incident aboard a train in the Cambridgeshire county of East England, British Transport Police (BTP) said.
London | London bound Train | Mass Stabbing |