நெருங்கும் காலக்கெடு: பரஸ்பர வரி விதிப்பு குறித்து டிரம்ப் புதிய அறிவிப்பு!

இந்தியா மீது 26% பரஸ்பர வரியை முன்னதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
நெருங்கும் காலக்கெடு: பரஸ்பர வரி விதிப்பு குறித்து டிரம்ப் புதிய அறிவிப்பு!
Carlos Barria
1 min read

வரும் ஜூலை 9-க்குள் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் இறுதியாவதில் தற்போது நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவுக்குப் பிற நாடுகள் செலுத்த வேண்டிய பரஸ்பர வரிகள் குறித்து அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அந்நாடுகளுக்கு வரும் திங்கட்கிழமை (ஜூலை 7) அனுப்ப திட்டமிடப்பட்டுள்ள 12 கடிதங்களில் ஏற்கனவே தாம் கையெழுத்திட்டுள்ளதாகவும், அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அதேநேரம் பிற நாடுகள் மீது விதிக்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டு தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பரஸ்பர வரிகள், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்யாத இந்தியா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலக்கெடு ஜூலை 9-ல் முடிவுக்கு வரும் என்று முன்னதாக டிரம்ப் அறிவித்திருந்தார். தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பால் அந்த காலக்கெடு ஆகஸ்ட் 1 வரை நீட்டிக்கப்படும் என்று உறுதியாகியுள்ளது.

இந்தியா மீது 26% பரஸ்பர வரியை முன்னதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. எனினும் சீனா தவிர்த்து, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர வரி நடைமுறை 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று ஏப்ரல் 9 அன்று அமெரிக்க அரசு அறிவித்தது.

இந்நிலையில், நேற்று (ஜூலை 4) செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், `நான் சில கடிதங்களில் கையெழுத்திட்டேன், அவை திங்கட்கிழமை அனுப்பப்படும், அநேகமாக 12 (எண்ணிக்கையில் இருக்கும்). வெவ்வேறு வரி விகிதங்கள்’ என்றார்.

அதேநேரம் அந்த 12 நாடுகள் குறித்த விபரங்கள் திங்கட்கிழமை வெளியிடப்படும் என்று அவர் தகவல் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in