அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா: டிரம்ப் கிண்டல்!

கனடாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும்.
அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா: டிரம்ப் கிண்டல்!
REUTERS
1 min read

அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா மாறும்போது ஏற்படும் நன்மைகள் குறித்து, தன் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. மாகாணங்களின் ஆட்சியை நடத்தும் பொறுப்பு அதன் ஆளுநர்கள் வசம் உள்ளது. இந்நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா இணைய வேண்டும் என கருத்து தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்.

இதன் தொடர்ச்சியாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அவ்வப்போது ஆளுநர் என்று கிண்டலாக அழைத்து வருகிறார் டிரம்ப். நேற்று வெளியிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியிலும் கூட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மீண்டும் ஆளுநர் என கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார் டிரம்ப்.

மேலும், அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா இணைந்தால், `அந்நாட்டு மக்களுக்கான வரிகளில் 60 சதவீதத்ற்கும் மேல் குறையும், உடனடியாக அவர்களுக்கான தொழில்கள் இருமடங்கு பெருகும், உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த ராணுவத்தின் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து கனடாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்காவிட்டால், கனடாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்ததை அடுத்து, ப்ளோரிடாவில் கடந்த மாதம் டிரம்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் ஜஸ்டின் ட்ரூடோ.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in